2012 ஆம் ஆண்டில் நம் பயணம்….
அனைவருக்கும் வணக்கம்.
2012ம் ஆண்டில் கற்பி அடுத்த கட்ட பணிகளை செய்ய ஆயத்தமாகி கொண்டிருக்கிறது.
நம் கற்பி குழு சமூக முற்போக்கு கருத்துக்களை வெறும் வாய்பேச்சில் மட்டும் பேசுவதோடல்லாமல் கீ போர்ட்டில் மட்டும் டைப் செய்வதோடல்லாமல் சமுகத் தளத்தில் இறங்கி நம்மால் இயன்ற செயல்களை செய்து வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்ததே!
கற்பி உறுப்பினர்கள் தான், காலத்தின் ஓட்டத்தில் சமூக அக்கறை கொண்ட செயல்களில் கற்பியை பயணிக்க வைக்கிறார்கள் என்பதே உண்மை.
சமூக அக்கறை கொண்ட செயலில் இறங்கும் உறுப்பினர்களை கொண்டதே நம் கற்பி குழு உறுப்பினர்களாலேயே நம் சமூகத்திற்கு நம்மாலான உதவிகளை செய்ய முடிந்தது.
இத்தகைய தோழர்களை கொண்டிருக்கும் குடும்பமாகிய நம் கற்பி குழு வருகிற 2012 முதல் அடுத்த கட்ட நிகழ்வுகளுக்காக தயாரிப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறது.
-
கல்வி பணியே முதன்மையான பணி என்பதால் முதலில் கல்வி பணியில் இருந்து இந்த ஆண்டும் நம்முடைய பயணத்தை தொடங்குவோம்…
மொடையூர் கிராம் செஞ்சியில் இருந்து 13 கிமி தொலைவிலும், திண்டிவனத்தில் இருந்து 23 கி.மி தொலைவிலும், திண்டிவனம் – செஞ்சி சாலையில் நாட்டார் மங்களத்தில் இருந்து 3 கி.மி தொலைவில் இருக்கிறது. ஏற்கனவே நம்முடைய குழு மொடையூர் சென்று வந்ததை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்,
மொடையூர் கிராமத்திலும் சுற்றியிருக்கும் கிராமப்பகுதியில் உள்ள மாணவ/மாணவிகள் அனைவறையும் பட்டதாரிகளாக உருவாக்கியும், உருவாக்கி கொண்டும் இருக்கிறார்கள் அங்கிருக்கும் சமுதாய அக்கறைகொண்ட நபர்கள் ஒன்று சேர்ந்து அறிவுச்சுடர் கல்வி மையம் என்று ஏற்படுத்தி 7 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி கல்வி பணியும் சமுதாய பணியும் செய்துகொண்டு வருகிறார்கள்.
மொடையூரில் விடியற்காலை 4 மணிக்கே மாணவர்களுக்கு கல்வி பணியை தொடங்கிவிடுகிறார்கள், பிறகு மீண்டும் மாலை 5 மணிக்கு தொடங்கி 8 மணிவரையிலும் கல்வி பணியை செய்கிறார்கள், தங்கள் ஊரில் மட்டும் இல்லாமல் சுற்றி இருக்கும் ஊர்களுக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்திகொண்டு இருக்கிறார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பவர்களை சமுதாய கூடங்களியே தங்கவைத்து இரவு நேர வகுப்பும் எடுக்கிறார்கள், இதன் பலனாக அவர்கள் பெருமையாக சொல்வது எங்கள் ஊரில் உள்ள மாணவ மாணவிகள் மட்டும் அல்லாது சுற்றியிருக்கும் ஊர்களை சேர்ந்த மாணவர்களையும் நாங்கள் பட்டதாரிகளாக உருவாக்கிவிட்டோம் என்று சொல்கிறார்கள், (ஆமாம் இதுவரை 150க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்) மாணவிகளையும் சென்னைக்கு அழைத்து வந்து கல்லூரிகளில் சேர்த்து படிக்கவைத்துகொண்டு இருக்கிறார்கள்.
கல்வி பணியோடு நின்றுவிடாமல் சமுதாய பணிகளையும் செய்துகொண்டு இருக்கிறார்கள், அந்த ஊரின் முழக்கமாக ஒளிப்பது ஜெய்பீம் என்றே…..
நிதி நெருக்கடியிலும் பணிச்சுமையிலும் போராடி சமூகவிடுதலைக்கு உழைத்துக்கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பும் தியாகமும் அளவுடமுடியாதது,,,,
- ”அறிவுச்சுடர்” குறித்தான புதிய தலைமுறையில்…
ஒரு சமுகத்தை கல்வி நிலையிலும் சமுதாய அக்கறையிலும் ஈடுபடுத்தி தங்களின் ஆற்றல் முழுவதும் செயல்படுத்தி வரும் அவர்களுக்கு சொந்தமாக ஒரு இடம் கூட இல்லை என்பதே உண்மை, வெட்டவெளியிலும் சமுதாய கூடங்களிலும் இந்த பணியை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பே சொந்தமாக இடம் வாங்கி மாணவர்களுக்கு கல்வி பணியை தொடர்ந்து தடையின்றி செய்யலாம் என்று இடத்தையும் தேர்வு செய்துவிட்டார்கள் ஆனால் பணம் இல்லாமல் அந்த இடத்தை வாங்கமுடியாமல் இருக்கிறார்கள் (9 செண்ட் இடம் தேர்வு செய்து இருக்கிறார்கள் இதன் விலை ஒரு செண்ட் 15,000, மொத்தமாக வாங்க 1,35,000 தேவைபடுகிறது, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அவர்களுக்கு இத்தொகை பெரும் சுமையாக இருக்கிறது, (அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே இந்த இடம் இருக்கிறது அதனால் இவ்வளவு விலை, அருகிலேயே இருந்தால் தான் மாணவர்களை எந்நேரமும் தயார்படுத்தமுடியும் என்பதால்.)
இந்த 9 செண்ட் இடம் 1,35,000 இடத்தை நாம் அனைவரும் ஒரு சிறு பங்களிப்பை செலுத்தி அவர்களுக்கு நம்மாலான உதவியை செய்யலாம்.
நிதி நெருக்கடியிலும் பணிச்சுமையிலும் போராடி போராடி சமூகவிடுதலைக்கு உழைத்துக்கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பும் தியாகமும் அளவுடமுடியாத்த்து,,,,
குடிசைகளாய் நிறம்பிக்கிடக்கும் அக்கிராமத்தின் கீற்றுக்கொட்டகைகளில் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கின்றன நாளைய சமூகத்தின் வெளிச்சங்களை.. வரவேற்க காத்திருப்போம்…
2012ம் தொடக்கத்தில் முதல் நிகழ்வாக நாம் இதே பணியை தொடர்வது என்று திட்டமிட்டுள்ளோம்.
கல்வி
இந்திய சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டால், அது சாதியை ஒழிப்பதில் உதவிகரமாக இருக்கும்; அம்மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கும். அறியாமையால், அவர்கள்தான் சாதி அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஒரேயொருமுறை அவர்களின் கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சாதி அமைப்புக்கு எதிராகப் போரிடத் தயாராகி விடுவார்கள்.
இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.
என்றார் புரட்சியார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.
கேடில் விழிச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றவை யவை”.
என்றார் வள்ளுவர்.
அதாவது அழிவில்லாத ஒரே செல்வம் கல்விச் செல்வமே மட்டுமே. மற்றபடி பொன்,பொருள், மண் என்று எது இருந்தாலும் அது செல்வமாகாது, என்ற திருவள்ளுவரின் சொற்களுக்கே ஏற்பவும்,
‘மீனைத் தராதே. மீன் பிடிக்க கற்றுக்கொடு’ என்ற ஒரு சீன பழமொழி சொல்கிற அறிவுரையும் கருத்தில் கொண்டு, இலவசமாக எந்த பொருட்களையும் யாருக்கும் தராமல், கல்வி மூலமாக விழிப்புணர்வை ஊட்டுவதே நம் கற்பியின் அடிப்படை கொள்கை.
அதன்படி, ஏழ்மையில் பாதிக்கப்பட்ட மாணவர்களை அவர்கள் படிக்கும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று நேரடியாக ஆய்வுச் செய்து அவர்களுக்கு தேவையான கல்விக் கட்டணத்தை அளித்து வருகிறோம்.
இத்தகைய கல்வி உதவித் திட்டத்திற்கு உடல் உழைப்பைச் செலுத்தி ஈடுபட்டவர்களையும், நல் கருத்துக்களை அளித்து வழிநடத்துபவர்களையும், நிதி உதவி அளித்து துணை நின்றவர்களையும் நினைவுக்கூர்ந்து நன்றி செலுத்தும் வகையிலும், பிறருக்கு உதவிச் செய்யும் உணர்வை உருவாக்கும் வகையிலும் கல்வி உதவி செய்து வருகின்றோம்.
நாம் எடுத்துகொண்ட இந்த இலட்சிய பணி நிச்சயம் நிறைவேரும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.
உறுப்பினர்களின் திறமையும் நேர்மையும் பொது விசயத்தில் உள்ள அக்கறையும் உணர்ந்துதான் இதை உறுதியாக சொல்கிறோம்.
வரலாற்று சிறப்பு மிக்க நம்முடைய இந்த தொடக்கம், பல்வேறு சமுக பொறுப்புள்ள செயல்களால் முடிவற்று தொடர்ந்துகொண்டே இருக்க போகிறது.
மொடையூர் மாணர்களுக்கான கட்டிடநிதி என்ற இந்த தொடக்கம், கல்வியில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் முதியவர்கள் ஆதரவற்ற குழைந்தைகள், பெண்கள் என்று நிற்கதியாக இருப்பவர்களூக்கு நம் கற்பி ஒரு கட்டுகோப்பான அமைப்பாக இருந்து தொடர்ந்து உதவிகளை செய்யும் என்பதை உறுதியேற்போம்.
எதையும் முறைப்படி சட்டப்படி செய்யவேண்டும் என்பதால் விரைவில் கற்பி பெயரில் அறக்கட்டளையாக பதிவு செய்யபட இருக்கிறோம்..
நம்முடைய நேர்மையினாலும் ஒற்றுமையினாலும் அறக்கட்டளையை சிறப்பாக நடத்துவதும் சமூகப்பொறுப்போடு செயல்படுவோம் என்று உறுதியேற்போம்.
வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம் .
-
மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில் அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது ஆகையால் அனைவரும் என்றும் புத்துணர்ச்சியுடன் நம் கற்பியை வழிநடத்தி முன்னேற்றம் காண்போம்.
நம் கற்பி வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து ஒருங்கிணைந்த முறையில் நாம் செயல்பட்டால் வெற்றியடைவது நிச்சயம்.
நமது பலம் என்பதை செயல்களில் காட்டுவோம்..
இந்த பயணமானது இன்னும் நெடும்தூரம் கொண்டு செல்ல வேண்டிய கடமைகள் நிறைய இருப்பதாய் கருதுகிறோம், விவாதங்கள் மட்டும் ஒரு விடிவிளக்காய் இருந்துவிட முடியாது….. பல சமுக அக்கறை கொண்ட உறுப்பினர்களை கொண்ட நம் கற்பி சற்றே களம் இறங்கி போராடினால் சின்ன சின்ன மாற்றமேனும் சமூகத்தில் கொண்டு வரலாம்….
காலம் தாழ்த்தாமல்
வாருங்கள் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கலாம்..
நம்மால் (கற்பி) முடியும்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் அம்பேத்கரின் கொள்கைகளை தீவிரமாகவும், அதை நடைமுறைபடித்தியும் இருக்கும் இக்கிராம மக்களுக்கு நாம் செய்யும் பணியாக இது இருக்கட்டும்
கற்பியை சமூக அக்கறை செயல்களில் இவ்வளவு தூரம் பயணிக்க வைத்த தோழர்களுக்கும், இனிமேலும் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வைக்க போகும் உங்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை கற்பி தெரிவித்து கொள்கிறது.
நன்றி
கற்பி குழு
———————
உங்களின் பங்களிப்பை செலுத்த…..
Name: SASIKUMAR.K
Bank:ICICI BNAK
Account type:Saving
Account Number:039501001739
-
IFSC Code: ICIC0000395
——–
ICICI BANK Address
Bank Name: ICICI Bank
Branch Name: CHENNAI – ANNANAGAR WEST
Address: OLD NO : 664, NEW NO:13, SCHOOL ROAD, ANNA NAGAR WEST, CHENNAI-101
City: CHENNAI – ANNANAGAR WEST
District: CHENNAI State: Tamil Nadu





