நோக்கம்

நோக்கம்:

  • நம் சமூகத்தைச் சார்ந்த பின்தங்கிய இளம் தலைமுறையினரின் கல்வி பொருளாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டல்.
  • சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை சரியான முறையில் அணுக வழிகாட்டி பொறுப்புள்ளவர்களாக மாற்றுதல்.
  • அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வாய்ப்புக்களை கண்டறிந்து அதை அடைவதற்கான  சிறப்பு பயிற்சிகளை அளித்தல்.
  • முன்னேற்றத்திற்கான சிந்தனைகளை செம்மைபடுத்தி   சமுக மேம்பாட்டிற்கான வழிகளை வகுத்தலே கற்பியின் முக்கிய நோக்கமாகும்.

 

செயல்திட்டங்கள் :

  • கிராமப்புற ஏழை மாணவர்களை அணுகி கல்வி, பொருளாதார, சமூக பின்னடைவிற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கான தீர்வுகளை வகுத்தல்.
  • 9 ஆம் வகுப்பு முதலே மாணவ, மாணவியருக்கு நல்ல மதிப்பெண் பெற தனி பயிற்சி அளித்தல்.
  • 10 ஆம் வகுப்பு, +2 வகுப்பு மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கான சிறந்த கல்வி நிறுவனங்களை கண்டறிந்து வழிகாட்டுதல்.
  • விடுதி, கல்வி உதவித்தொகை, கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகளை பெற வழிகாட்டுதல்.
  • உயர் கல்வி , ஆராய்ச்சி மற்றும் அயல்நாடுகளில் சென்று பயில்வதற்கு வழிகாட்டுதல்.
  • வங்கி, இரயில்வே, இந்திய ஆட்சிப்பணி, அரசுப்பணித் தேர்வுகளுக்கு வழிகாட்டி பயிற்சி அளித்தல்.
  • மாணவிகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • மாவட்டம் தோரும் பயிற்சிப் பட்டறை நடத்துதல்.
  • குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து கல்வி அறிவை புகுத்துதல்.
  • கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு உளவியில ரீதியான பிரச்சனைகளை (ரேகிங், மாற்றுமொழி தாழ்வுமனப்பான்மை) எதிர்கொள்வதற்கான பயிற்சி அளித்தல்.
  • மாணவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறனை (கலை, இலக்கியம், விளையாட்டு) கண்டறிந்து துறை ரீதியாக அவர்களை தயார் செய்தல்.
  • நம் சமூக மாணவர்கள் சந்திக்கும் சமகாலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயார்படுத்துதல் (Personality development).
  • சமூக விடுதலைப் போரட்டங்களில் தன் இன்னுயிரை இழந்த சமூகப் போராளிகளின் வாரிசுகளுக்கு உயர்கல்வி வரை கல்விச் செலவை ஏற்றல்.