பொறியியல் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: 21 முதல் விண்ணப்பம் விநியோகம்

By at February 19, 2012 | 9:50 am | Print

பொறியியல் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: 21 முதல் விண்ணப்பம் விநியோகம்

சென்னை, பிப்.13: அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 154 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு பிப்ரவரி 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 5 மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 8-ம் தேதி போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பாலிடெக்னிக் முதல்வர்களிடம் ரூ.50 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னையிலுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது விண்ணப்பங்களைப் பெற்ற பொறியியல் கல்லூரி முதல்வர், பாலிடெக்னிக்குகளின் முதல்வர்களிடமோ சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டித் தேர்வு: போட்டித் தேர்வு 190 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். பிரதானப் பாடத்தில் 180 மதிப்பெண்ணுக்கும், பொது அறவில் 10 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடைபெறும்.

தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி ஒரு பதவிக்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் அனுபவம் பெற்றிருந்தால் 2 மதிப்பெண் வழங்கப்படும். பி.எச்டி. படிப்புக்கு பொறியியல் பணிக்கு 8 மதிப்பெண்ணும், பொறியியல் அல்லாத பணிகளுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

அரசுத்துறை வேலைவாய்ப்பு

Related Posts

One Comment


  1. Best wishes.... for u, 2 months ago Reply

    pls aend to my email for future details….


Post Your Comments