திருவண்ணாமலை மாட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவகம் சென்று கல்விக்கான உதவி விபரங்களை தெரிந்துகொண்டு வந்தோம்.

By at January 10, 2012 | 2:26 am | Print

திருவண்ணாமலை மாட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவகம் சென்று கல்விக்கான உதவி விபரங்களை தெரிந்துகொண்டு வந்தோம்.

நேற்று(9-01-2012) திருவண்ணாமலை மாட்ட ஆட்சியர் அலுவலகம் (collector Office)சென்று இருந்தேன், அங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவகம் சென்று கல்விக்கான உதவி பெரும் விபரங்களை தெரிந்துகொண்டு வந்தேன், 1ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிப்பதற்க்காண உதவி தொகையை தருகிறோம் என்றார்கள்.

இதனை நமது கற்பி குழு அனைத்து மாவட்டகளிலும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலகம் விபரங்களை தெரிந்து கொண்டு மாணவர்களுக்கான கல்வி உதவியை முழுமையாக பெற்று  பயன்படுத்த வேண்டும்.

 

திருவண்ணாமலையில் ஆதிதிராவிட நலம் மற்றும் பழங்குடிநலத்துறையில் கல்வி உதவி தொகை கொடுக்கும் பணியில் வேலை செய்யும் முருகன் என்பவரிடம் 30 நிமிடங்கள் கற்பியையும்,நம் மக்களுக்கான கல்வி உதவியை எப்படி பெருவது என்பதை பற்றியும் பேசிவிட்டு வந்தேன் , அங்கு வேலை செய்யும் முருகனையும் நம் கற்பி குழுவில் இணையும் படி கேட்டுக்கொண்டேன் அவரும் கண்டிபாக நானும் இணைந்து செயல்படுகிறேன் என்றார்.

இன்னோரு முறை விடுமுறை தினத்தில் தனிபட்ட முறையில் அவரை சந்தித்து நமது கற்பி குழுவில் அவரை தீவிரமாக செயல்படவைப்போம்.அவரின் தொலைபேசி எண்னையும் வாங்கிகொண்டு வந்து இருக்கிறேன்.இன்னும் விரிவாக பேசி அவரை நாம் நம் குழுவுடன் சேர்ந்து தீவிரமாக செயல்படவைப்போம்.

உதவித்தொகை கல்வி மாணவர்களுக்கு

Related Posts

Post Your Comments