ஆராய்ச்சி பிரிவு மாணவர்களுக்கு….

By at December 8, 2011 | 5:14 am | Print

ஆராய்ச்சி பிரிவு மாணவர்களுக்கு….

சம்பந்தபட்ட துறையில் முதுகலை படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் போதும்.

பி.எச்டி., மற்றும் சம்பந்தபட்ட துறையில் ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம், ஆசிரியர் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

பி.எச்டி., பிரிவினர் முதுகலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் போதும். இவர்கள் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இதே துறையில் எம்.பில்., முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

* முதுகலை பிரிவைச் சேர்ந்தவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் போதும். இவர்களுக்கு 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

உதவித்தொகை எண்ணிக்கை: 30 (ஒரு ஆண்டுக்கு), (எஸ்.சி.,17, எஸ்.டி.,9, சீர்மரபினர் 1, பிற மதங்களுக்கு மாறிய எஸ்.சி., பிரிவினர் 2, நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் 1)

கால அளவு: ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்தவர்கள்: 1.5 ஆண்டுகள்; பி.எச்டி.,: 4 ஆண்டுகள்

உதவித்தொகை விவரம்:

முதுகலை பிரிவுக்கு மெயின்டனன்ஸ் அலவன்ஸ் 770 யு.எஸ்.டாலர்ஸ் (ஒரு ஆண்டுக்கு)/மெயின்டனன்ஸ் அலவன்ஸ் பிரிட்டன் பவுண்டு 5000 (ஒரு ஆண்டுக்கு)

உடனடி உதவி: ஆண்டுக்கு 500 யு.எஸ்.டாலர்/பிரிட்டன் பவுண்டு 352/ஒரு ஆண்டுக்கு

இதர சலுகைகள்:

எக்யூப்மென்ட் அலவன்ஸ் ரூ. 1100, உடனடி பயணத்திற்கான அலவன்ஸ் 15 யு.எஸ்.டாலர் அல்லது அதற்கு நிகரான இந்திய மதிப்பு பணம். ஆராய்ச்சி உள்ளிட்ட செலவுகளுக்காக ஒரு ஆண்டுக்கு 2400 யு.எஸ்.டாலர்ஸ்/பிரிட்டன் பவுண்டு 1560 (ஒரு ஆண்டுக்கு)

விண்ணப்பிக்கும் முறை:

வெள்ளைத் தாளில் முழு விவரங்களை அச்சிட்டு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://tribal.nic.in/index.asp என்ற வெப்சைட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Scholarship : தேசிய வெளிநாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்
Course : அறிவியல் (பி.எச்டி.,)
Provider Address : MINISTRY OF TRIBAL AFFAIRS Shastri Bhavan, New Delhi-110001. Email: dirit@tribal.nic.in www.tribal.nic.in

அரசு அறிவிப்புகள் மத்திய அரசு மாணவர்களுக்கு

Related Posts

Post Your Comments